மட்டு.புனித சிசிலியா பெண்கள் உயர்தரப் பாடசாலையில்இ விஞ்ஞானக் கண்காட்சி.......
மட்டக்களப்பு புனித சிசிலியா பெண்கள் உயர்தரப் பாடசாலையில், மாணவர்களின் நன்மை கருதி மாபெரும் விஞ்ஞானக் கண்காட்சி நடாத்தப்படுகிறது.
செயல்மாதிரிகள், நேரடி செயல் விளக்கம், நிழற்பட மாதிரிகள், ஆய்வுகூடத்தைப் பார்வையிடல், விஞ்ஞான ரீதியான செயல் விளக்கம், கோள் மண்டலம், மெய் நிகர் நிகழ்ச்சி, முப்பரிமாணக் காட்சி, தனியாள் சுகாதார ஆலோசனைக் கூடம், வீட்டுத் தோட்டப் பயிர்க்கொள்வனவு, சிற்றுண்டிச்சாலைகள், விந்தையான விளையாட்டு போன்றவைகளும் கண்காட்சி கூடத்தில் இடம்பெற்றுள்ளன.
இரண்டு நாட்கள் நடைபெறவுள்ள இந்த விஞ்ஞானக் கண்காட்சியின் ஆரம்ப நிகழ்வு இன்று (28) இடம்பெற்றது. பாடசாலை அதிபர் அருட்சகோதரி நிதாஞ்சலி தலைமையில் நடைபெற்ற ஆரம்ப நிகழ்வில், பிரதம அதிதியாக மட்டக்களப்பு வலயக் கல்விப் பணிமனையின், திட்டமிடல் பிரிவு பிரதிக் கல்விப் பணிப்பாளர் ஹரனியா சுபாகரன் கலந்துகொண்டு, கண்காட்சியை ஆரம்பித்து வைத்தார்.
பாடசாலை முன்றலில் இருந்து பாண்ட் வாத்திய இசை முழங்க அதிதிகள் வரவேற்கப்பட்டனர். இரண்டு நாட்களைக் கொண்ட இக் கண்காட்சியை நாளை தினம் பொதுமக்கள் பார்வையிட முடியும். இன்றைய தினம் பாடசாலை மாணவர்களுக்கான அனுமதி மாத்திரம் வழங்கப்பட்ட நிலையில், அயல் பாடசாலைகளைச் சேர்ந்த பெருமளவான மாணவர்கள் கண்காட்சியைப்பார்வையிட்டுச் சென்றதை அவதானிக்க முடிந்தது.
சிசிலியா பெண்கள் உயர்தரப் பாடசாலை அபிவிருத்திக் குழுவினர் மற்றும் பழைய மாணவிகளும் கண்காட்சிக்கான ஒத்துழைப்புக்களை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Comments
Post a Comment