மட்டு. நாயகனிற்கு, இராணுவத்தினரால் கௌரவிப்பு நிகழ்வு.....
மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரியின் பழைய மாணவரும் ஜனாதிபதி விருது பெற்ற சிரேஷ்ட சாரணருமான தவேந்திரன் மதுஷிகன், பாக்கு நீரிணையை நீந்திக் கடந்து சாதனை படைத்தமைக்காக, 231 வது இராணுவ படைப்பிரிவினால் மட்டக்களப்பில் இன்று (04) கௌரவிக்கப்பட்டார்.
231 வது படைப்பிரிவின் பிறிகேட் கொமாண்டர் திலீப பண்டார தலைமையில், 231 வது இராணுவ படைப்பிரிவின் கல்லடி இராணுவ முகாமில் இடம்பெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கலாமதி பத்மராஜா கலந்து கொண்டு சிறப்பித்தார்.
பாக்கு நீரிணையைக் நீந்திக் கடந்ததுடன், பிளாஸ்டிக் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்திய சாதனையாளரான மதுஷிகனிற்கு, 231 படைப்பிரிவின் பிரிகேட் கொமாண்டர் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஆகியோர் இணைந்து நினைவுச்சின்னமொன்றினையும் வழங்கினர்.
மாணவனின் சாதனையினை பாராட்டி மட்டக்களப்பு புதிய நூற்றாண்டு M.G.F. லயன்ஸ் கழகத்தின் ஸ்தாபகத் தலைவர் லயன் நவசிவாயம் புஸ்பாகரனினால் பணப்பரிசிலும் வழங்கப்பட்டது.
நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் அமல் எதிரிமான, மட்டக்களப்பு வலயக்கல்வி பணிப்பாளர் சுஜாதா குலேந்திரகுமார், புனித மிக்கேல் கல்லூரியின் அதிபர், மதுஷிகனின் பெற்றோர், இராணுவ அதிகாரிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.
Comments
Post a Comment