மட்டக்களப்பு மாநகர சபையின் கவனத்திற்கு.....

 மட்டக்களப்பு மாநகர சபையின் கவனத்திற்கு.....

மட்டக்களப்பு அழகான நகரம் அதை நாம் அழகாக வைத்திருப்போம் அழகாகத்தான் இருந்த இடங்களை அசிங்கப்படுத்த சிலர் முற்படுகின்றார்கள். கோட்டைமுனை பாலத்தில் சிறுவர்களுக்காக அமைக்கப்ட்டுள்ள பூங்கா வெள்ளை நிற மதிலில் தங்கள் விளம்பர சுவரொட்டிகளை ஒட்டியுள்ளார்கள் சிலர்.

 கடந்த காலங்களில் யாரும் இந்த இடத்தில் எந்த சுவரொட்டிகளும்  ஒட்டாமல் அழகாக காட்சி தந்த இந்த இடத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன் புத்தக கண்காட்சிக்காக ஒரு விளம்பர சுவரொட்டி ஒட்டப்பட்டது. அதன் பின் தற்போது ஒரு சில சுவரொட்டிகள் அழகான அந்த மதிலில் ஒட்டப்பட்டுள்ளதை அவதானிக்க முடிகின்றது இதை நீங்கள் தடுக்காமல் விட்டால் தொடர்ந்தும் இவ்விடத்தில் தங்கள் விளம்பர சுவரொட்டிகளை ஒட்டி மட்டக்களப்பு மாநகரத்தையே அசிங்கமாக்கி விடுவார்கள்.

இதே போல் தான் மட்டக்களப்பில் உள்ள பஸ்தரிப்பு நிழல் தரிப்பிடங்களிலும் சுவரொட்டிகளை ஒட்டியுள்ளார்கள். இதை சற்று  கவனத்தில் எடுத்துக் கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கின்றோம். 






Comments