'மட்டு முயற்சியாண்மை' பிரதேச மட்ட விற்பனைக் கண்காட்சி

 'மட்டு முயற்சியாண்மை' பிரதேச மட்ட விற்பனைக் கண்காட்சி.......

மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலக சிறு தொழில் முயற்சி அபிவிருத்தி பிரிவின் ஏற்பாட்டில் 'மட்டு முயற்சியாண்மை -2023' உள்ளூர் உற்பத்தி பொருட்களுக்கான பிரதேச மட்ட விற்பனைக் கண்காட்சி (31) மண்முனை வடக்கு பிரதேச செயலக வளாகத்தில் இடம்பெற்றது.

மண்முனை வடக்கு பிரதேச செயலாளரின் ஆலோசனை மற்றும் வழிகாட்டலின் கீழ் இக் கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டது. நிகழ்வில் உதவி பிரதேச செயலாளர்கள் சியாவுல் ஹக், பிரசந்தன் லக்சன்யா, செயலக கணக்காளர் சி.புவனேஸ்வரன் உட்பட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

Comments