ஓட்டமாவடியில் சமுர்த்தி சௌபாக்கியா ரண்விமன, ஜயவிமன வீட்டுத்திட்டம் ஆரம்பம்.............

 ஓட்டமாவடியில் சமுர்த்தி சௌபாக்கியா ரண்விமன, ஜயவிமன வீட்டுத்திட்டம் ஆரம்பம்.............

கோறளைப்பற்று மேற்கு, ஓட்டமாவடி பிரதேச செயலகப் பிரிவில் சமுர்த்தி சௌபாக்கியா ரண்விமன மற்றும் ஜயவிமன வீடுத்திட்டத்திற்கு தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளின் வீட்டு வேலைகள் (20) உத்தியோகபூர்வமாக பிரதேச செயலாளர் வீ.தவராஜா, உதவிப்பிரதேச செயலாளர் எஸ்.எம்.எம்.அல்அமீன் ஆகியோரினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் சமுர்த்தி தலைமையக முகாமையாளர் எம்.ஐ.எ.அஸீஸ், சமுர்த்தி சமூக அபிவிருத்தித்திட்ட உதவியாளர் எம்.என்.எம்.சாஜஹான், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.எல்.எம்.நியாஸ், எஸ்.சாக்கீர் (காண்டீபன்) மற்றும் சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்புக்களின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.
காகிதநகர் 210B கிராம உத்தியோகத்தர் பிரிவைச் சேர்ந்த 03 பயனாளிகளுக்கு வீடு திருத்த வேலைகளுக்காக 250,000/- வீதமும் மாஞ்சோலை 207A, மீராவோடை 207B கிராம உத்தியோகத்தர் பிரிவுகளைச்சேர்ந்த 03 பயனாளிகளுக்கு 750,000/- வீதமும் சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தினால் வழங்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
மீதி நிதி சொந்த பங்களிப்பு, உறவினர்கள், நண்பர்கள் மற்றும் நலன்விரும்பிகளின் உதவிகள் மூலம் வீட்டுவேலைகளைப் பூரணப்படுத்த திணைக்களம் எதிர்பார்க்கிறது.









Comments