வாகரை றிதிதென்னையில் சிறுவன் ஒருவன் உயிரிழப்பு............
மட்டக்களப்பு வாகரை றிதிதென்னை புதிய கிராமப் பகுதியில், தண்ணீர் பவுசரில் சிக்கி சிறுவன் ஒருவர் உயிரிழந்ததால், ஆத்திரமடைந்த பிரதேச வாசிகள் தண்ணீர் பவுசரை தீயிட்டு கொழுத்தியதாக வாழைச்சேனை பொலிசார் தெரிவித்தனர்.
றிதிதென்னை புதிய கிராமத்தைச் சேர்ந்த ஆறு வயதுடைய முகம்மது ருஷ்த்திக் எனும் சிறுவனே சம்பவ இடத்தில் உயிரிழந்தார். தனியார் வகுப்பிற்கு சென்று சகோதரனுடன் துவிச்சக்கர வண்டியில் வந்த வேளை, இவ் விபத்து சம்பவித்துள்ளது.
இச்சம்பவத்தினை தொடர்ந்து ஆத்திரமடைந்த பிரதேச வாசிகள் வாகனத்தை கொழுத்தியதுடன், அதில் பயணம் செய்தவர்களையும் தாக்க முற்பட்டனர்.
பொலிசார் சம்பவ இடத்திற்கு சென்று கலவரம் இடம்பெறாமல் தடுத்ததுடன், பவுசர் சாரதி மற்றும் உதவியாளரை, கைது செய்தனர்.
குறித்த சிறுவனின சடலம் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன்இ பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது
Comments
Post a Comment