மட்டு மாவட்ட செயலகத்தில் டெங்கு சிரமதான பணிகள்.......
மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் இன்று (07) டெங்கு நுளம்பை ஒழிப்பதற்கான சிரமதான பணிகள் மாவட்ட அரச அதிபர் கலாமதி பத்மராஜா அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் நடைபெற்றது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்கு நுளம்பின் தாக்கம் அன்மைக்காலங்களில் அதிகரிக்கப்பட்டுள்ளதை அவதானித்து, அதனை கட்டுப்படுதம்துவதற்கான ஒரு செயற்பாடாகவே இந்த சிரமதான பணிகள் முன்னெடுக்கப்பட்டன. இதன் மூலம் முதலில் டெங்கு நுளம்பு பெருகும் இடங்களை கண்டு அதனை துப்பரவு செய்தல், அத்துடன் பிளாஸ்டிக் பொருட்களை அகற்றுதல் மற்றும் அவ்விடத்தை அழகுபடுத்ததல் எனும் சிந்தனையில் இச்சிரமதான பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
இச்சிரமதான பணிகளில் மாவட்ட செயலகத்தில் பணிபுரியம் சகல பிரிவு உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டது விசேட அம்சமாகும்.
Comments
Post a Comment