மட்டக்களப்பு களுமுந்தன்வெளி கிராமத்தில் கலப்பின சோளன் அறுவடை..
மட்டக்களப்பு மாவட்ட விவசாய திணைக்கள காந்திபுரம் விவசாய போதனா ஆசிரியர் பிரிவின் களுமுந்தன் வெளி கிராமத்தில் கலப்பின சோளன் அறுவடை விழா விவசாய போதான ஆசிரியர் பரமேஸ்வரன் சகாப்தனின் ஏற்பாட்டில் இடம் பெற்றது
பிரதம அதிதியாக மாவட்ட பிரதி விவசாய பணிப்பாளர் வி.பேரின்பராஜா கலந்து கொண்டார். நிலக்கடலை மற்றும் கௌபி என்பனவும் இதன்போது அறுவடை செய்யப்பட்டன.
மட்டக்களப்பு மாவட்ட விவசாய திணைக்களத்தினால் விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில் பிரதேச விசாய போதனாசிரியர் பிரிவுகளுடாக பல்வேறு செயற்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Comments
Post a Comment