பெரிய கல்லாறு பகுதியில் கஞ்சா கடத்திச் சென்ற இருவர் பொலிஸாரால் கைது........
மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடி பிரதேசத்திற்கு மோட்டார் சைக்கிளில் கஞ்சாவை கடத்திச் சென்ற இருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.
அக்கரைப்பற்றில் இருந்து மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடி பிரதேசத்திற்கு சுமார் 9.1/2 கிலோ கஞ்சாவை கடத்திச் சென்ற இருவரை பெரிய கல்லாறு பிரதேசத்தில் வைத்து பொலிஸார் கைது செய்துள்ளனர்.
மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவிற்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து கிழக்கு பிராந்திய சிரேஸ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித்ரோகனவின் ஆலோசனைக்கமைய, உதவி பொலிஸ் மா அதிபர் எம்.பி.லியனகே, சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஏ.எதிர்மன்ன, உதவி பொலிஸ் அத்தியட்சகர் கே.எம். ஏ.கே.பண்டார ஆகியோரின் வழிகாட்டலில் கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
சந்தேக நபர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், மேலதிக விசாரணைகளை மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவினர் மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
Comments
Post a Comment