பட்டிருப்பு மத்திய மகா வித்தியாலயம் தேசிய பாடசாலையில் வணிக வாரம்....

 பட்டிருப்பு மத்திய மகா வித்தியாலயம் தேசிய பாடசாலையில் வணிக வாரம்....

பட்டிருப்பு மத்திய மகா வித்தியாலயத்தின் வணிகவாரம் களுவாஞ்சிகுடியில் 04.07.2023 முதல் 07.07.2023 மிக சிறப்பாக நடைபெற்றன.

பாடசாலை முதல்வர் ஆ.சபேஸ்குமார்  அவர்களது வழிகாட்டலில் வர்த்தகப்பிரிவு பகுதித்தலைவர் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் பங்களிப்புடனும் நிகழ்வுகள் நடைபெற்றன.

05.07.2023 அன்று காலை ஒன்று கூடலில் வணிகமும் தற்கால பொருளாதார நெருக்கடிகளும் எனும் தலைப்பில் மாணவி க.வஜித்திரா அவர்களின் பேச்சு இடம்பெற்றதுடன், 06.07.2023 அன்று காலை ஒன்று கூடலில் சமகால பொருளாதார நெருக்கடிகளும் அதற்கான காரணங்களும்.எனும் தலைப்பில் உதவி அதிபர் வி.ரவீந்திரமூர்த்தி அவர்களின் பேச்சு இடம்பெற்றது. 07.07.2023 அன்று காலை ஒன்று கூடலில் வணிகத்துறை தெரிவும் எதிர்காலமும் எனும் தலைப்பில் குறுநாடகம் ஒன்று மேடையேற்றப்பட்டது.

அதனைத்தொடர்ந்து உயர்தர வணிக மாணவர்களுக்கான செயலமர்வும் இடம்பெற்றது.










Comments