மட்டக்களப்பு மேற்கு வலய வறிய மாணவர்களின் நன்மைகருதி அறக்கட்டளை...

 மட்டக்களப்பு மேற்கு வலய வறிய மாணவர்களின் நன்மைகருதி அறக்கட்டளை...

மட்டக்களப்பு மேற்கு பகுதியில் உள்ள வறிய மாணவர்களின் நன்மை கருதி அருள்-சிறி அறக்கட்டளையும் புலமைப்பரிசில் திட்டமும் அங்குரார்ப்பணம் செய்யும் நிகழ்வு இன்று (19) நடைபெற்றது.

மண்முனை மேற்கு வலயத்தில் அதிபராகவும் ஆசிரியராகவும் பல்வேறு இடர்காலத்தில் தனது இறுதி மூச்சிவரை பணியாற்றி காலமான அதிபர் அருளம்பலம் மற்றும் அவரது துணைவியார் ஸ்ரீகரதேவி ஆகியோரின் ஒருவருட ஞாபகார்த்ததை முன்னிட்டு வறிய மாணவர்களின் நன்மை கருதி இந்த அறக்கட்டளை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

சுவிஸ்லாந்தின் பிரபல வைத்திய நிபுணரும் ஆராய்ச்சியாளரும் அதிபர் அருளம்பலம் அவர்களின் மகன் DR.அருளம்பலம் பிரகாஸ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வி.வாசுதேவன் பிரதம அதிதியாக கலந்து கொண்டார். சிறப்பு அதிதிகளாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன், மட்டக்களப்பு மேற்கு வலய பிரதிக்கல்வி பணிப்பாளர் எஸ்.மகேந்திரகுமார், இந்தியாவின் தமிழ்நாட்டின் பிரபல தொழிலதிபர் கே.மோகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்வின்போது அருள்-சிறி அறக்கட்டளையும் புலமைப்பரிசில் திட்டமும் அங்குரார்ப்பணம் செய்துவைக்கப்பட்டது. மட்டக்களப்பு மேற்கு வலயத்திலிருந்து உயர்தரப்பிரிவில் கணிதம், விஞ்ஞான துறையில் கற்கும் மாணவர்களுக்கான புலமைப்பரிசில்கள் வழங்கப்பட்டதுடன் அவர்கள் பாராட்டி கௌரவிக்கப்பட்டனர்.

Comments