தன் சம்பளத்தில் ஒரு பகுதியை கஸ்டமான, ஆதறவற்ற மாணவர்களின் கல்விக்காக செலவு செய்த சிறிதரன் அதிபர்....
மட்டக்களப்பு மேற்கு நாவற்காடு கனிஷ்ர வித்தியாலய அதிபர் முத்துலிங்கம் ஸ்ரீதரன் அவர்கள் இன்றுடன் ஓய்வு நிலைக்கு செல்கின்றார். அதிபர் சேவையில் தரம் - 1 சேவையாற்றி அவர் தன் ஓய்வு நிலைக்கு செல்கின்றார்.
முத்துலிங்கம் சிறிதரன் அதிபர் அவர்கள் மட்டக்களப்பின் நகர் புறமான தாமரைக்கேணியில் முதலில் வசித்தவர் பின்னர் திருமணத்தின் பின் திருமலை வீதியில் வசித்தவர், ஆனால் அவர் தன் சேவையை மட்டக்களப்பு மேற்கு வலயத்திலேயே தன் சகல முன்னேற்றத்தையும் கண்டு, அங்கேயுள்ள மாணவர்களில் அக்கறை கொண்டு அங்கேயே ஓய்வு நிலைக்கு வந்துள்ளார் பாராட்டத்தக்க விடயம் என்றே கூறலாம், இது மாத்திரமன்றி தனது சம்பளத்தின் மூலம் கிடைக்கும் பணத்தில் ஒரு பகுதியை கஷ்டமான, ஆதரவற்ற, மாணவர்களின் கல்விக்காக மாதாந்த நிதித் தொகையை அன்று தொட்டு இன்று வரையும் வழங்கி வரும் ஒரு உயரியவர் என்றே கூறலாம்.
இவர் தனது முதலாவது ஆசிரியர் நியமனத்தை 1988ம் ஆண்டு மட்/மமே/ஈச்சந்தீவு RKM வித்தியாலயத்தில் தன் கன்னி ஆசிரியர் பயணத்தை தொடங்கிய போது, இவரது தந்தையாரான முத்துலிங்கம் அவர்கள் அப்பாடசாலையின் அதிபராக கடமையாற்றி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.
இதன் பின்னர் மட்/மமே/வவுணதீவு பரமேஷ்வரா வித்தியாலயத்தில் ஆசிரியராக பணிபுரிந்து பின்னர் அதிபர் சேவையில் இணைந்து அப் பாடசாலையின் வளர்ச்சியில் பெரும் பங்காற்றியவர். இதனை தொடர்ந்து மட்/மமே/கரவெட்டி தெற்கு GTMS பாடசாலையில் நீண்ட காலம் சேவையாற்றி பலரது மனங்களிலும் நீங்காத இடம்பிடித்தார்.
இதன் பின்பு மட்/மமே/நாவற்காடு நாமகள் கனிஷ்ர வித்தியாலயத்தை பொறுப்பேற்று தனது அனுபவத்தினால் சிறப்பாக பாடசாலையையும் சமூகத்தையும் இணைத்தவர், கற்றல் சூழலை மாற்றி பாட அடைவு மட்டத்தை உயர்த்தினார்.
முக்கியமாக ஒரு விடயத்தை நான் பதிவிட விரும்புகின்றேன் தற்காலத்தில் அரச சேவை வேண்டும் என பலரும் முதலில் தேடுவார்கள், அதன் பின் நகர புறத்தில் சேவையாற்ற இடமாற்றம் கோருவார்கள், பின் தங்கள் வீடுகளுக்கு அண்டியதாக சேவையாற்றுவார்கள், ஆனால் முத்துலிங்கம் சிறிதரன் அதிபர் அவர்கள் மட்டக்களப்பின் நகர் புறமான தாமரைக்கேணியில் முதலில் வசித்தவர் பின்னர் திருமணத்தின் பின் திருமலை வீதியில் வசித்தவர் ஆனால் அவர் தன் சேவையை மட்டக்களப்பு மேற்கு வலயத்திலேயே தன் சகல முன்னேற்றத்தையும் கண்டு, அங்கேயுள்ள மாணவர்களில் அக்கறை கொண்டு அங்கேயே ஓய்வு நிலைக்கு வந்துள்ளார் பாராட்டத்தக்க விடயம் என்றே கூறலாம், இது மாத்திரமன்றி தனது சம்பளத்தின் மூலம் கிடைக்கும் பணத்தில் ஒரு பகுதியை கஷ்டமான, ஆதரவற்ற, மாணவர்களின் கல்விக்காக மாதாந்த நிதித் தொகையை அன்று தொட்டு இன்று வரையும் வழங்கி வரும் ஒரு உயரியவர் என்றே கூறலாம்.
இப்படி பட்ட ஒரு அதிபர் இனிவரும் காலங்களில் தங்களுக்கு கிடைக்கப்போவதில்லை என மட்டக்களப்பு மேற்கு வலய மக்கள் தங்கள் வேதனையை பகிர்ந்துள்ளனர்.
Comments
Post a Comment