மட்டக்களப்பில் உணவகங்களில் திடீர் சோதனை - பல உணவகங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை!!

 மட்டக்களப்பில் உணவகங்களில் திடீர் சோதனை - பல உணவகங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை!!

மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்குட்பட்ட புளியந்தீவு, கோட்டைமுனை, கல்லடி, வெட்டுக்காடு உள்ளிட்ட பகுதிகளில் உணவு தயாரிப்பில் ஈடுபடும் ஹோட்டல்கள், சிற்றூண்டிச்சாலைகள், உணவு தயாரிக்கும் இடங்களில் (06) திடீர் சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
உணவு பாதுகாப்பு இல்லாமல் மனித பாவனைக்குதவாத உணவுகள் காணப்பட்ட சில ஹோட்டல்கள், சிற்றூண்டிச்சாலைகள், உணவு தயாரிக்கும் இடங்களின் உரிமையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
சுகாதார அதிகாரிகளினால் 37 உணவகங்கள் திடீர் பரிசோதனைக்கு உற்படுத்தப்பட்டதுடன் சுகாதார முறையின்றி காணப்பட்ட 10 உணவகங்கள் மீது சட்ட நடவடிக்கை மேற்கொண்டதுடன் 11 உணவகங்களுக்கு இதன்போது தற்காலிக சீல் வைக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியகலாநிதி குணசிங்கம் சுகுணன் தலைமையில் அவருடைய வழிகாட்டலில் நான்கு பிரிவுகளாக பிரிந்து இச்சோதனை நடவடிக்கையில் சுகாதார வைத்திய அதிகாரிகள், பொதுச்சுகாதார பரிசோதகர்கள், சுகாதார அதிகாரிகள், உத்தியோகத்தர்கள் இதன் போது கலந்து கொண்டுள்ளனர்.
உணவு பாதுகாப்பு திட்டத்தின் கீழ் இந்த சோதனை நடவடிக்கை மாவட்டம் முழுவதும் மேற்கொள்ள நடவடிக்கை எடுகப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியகலாநிதி ஜீ.சுகுணன் தெரிவித்துள்ளார். அத்தோடு மனித பாவனைக்கு உதவாத கைப்பற்றப்பட்ட உணவுப்பொருட்கள் இன்று அழிக்கப்பட்டதாக பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியகலாநிதி ஜீ.சுகுணன் இதன்போது தெரிவித்தார்.











Comments