காத்தான்குடியில் சர்வதேச தரத்திலான பெட்மின்டன் அரங்கு பயிற்சிக்காக திறந்து வைப்பு.........

 காத்தான்குடியில் சர்வதேச தரத்திலான பெட்மின்டன் அரங்கு பயிற்சிக்காக திறந்து வைப்பு.........

காத்தான்குடியில் புதிதாக நிர்மமாணிக்கப்பட்டுள்ள சர்வதேச தரத்திலான அல்ட்றா பெட்மின்டன் அரங்கு எதிர்வரும் ஆகஸ்ட் 1ம் திகதி முதல் பயிற்சிக்காக திறந்து வைக்கப்படவுள்ளது.
இந்த அரங்கானது 3 காபட் கோட்களை கொண்டு அமைக்கப்பட்டுள்ளதுடன் ஒரே தடவையில் 3 வெவ்வேறு போட்டிகளை நடாத்தக் கூடியதாக அமைக்கப்பட்டுள்ளது. இதே வேளை தேசிய ரீதியான பெட்மின்டன் போட்டிகளயும் நடாத்துவதற்கு உகந்த வகையில் இலங்கை பெட்மின்டன் சபையின் நிபந்தனைகளுக்கு உட்பட்டு இந்த பெட்மின்டன் அரங்கு நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
இச்சிறப்பம்சங்களை கொண்ட அல்ட்றா பெட்மின்டன் கோட் கிழக்கு மாகாணத்தின் முதல்தரம் வாய்ந்த அரங்காக விளையாட்டு ரசிகர்களால் பிரஸ்தாபிக்கப்படுகின்றது.
இவ்வரங்கினைப் பயன்படுத்துவதற்கான அனுமதி, பாடசாலை மாணவர்கள் குறித்த பாடசாலை ஊடாகவும், விளையாட்டு கழக உறுப்பினர்கள் குறித்த கழகத்தின் ஊடாகவும் காலை 7.00 மணி தொடக்கம் மாலை 5.00 மணிவரை 1 மணி நேரம் விளையாட பதிவு செய்ய முடியும்.
ஏனைய வெளி நபர்கள் மாலை 5.00 மணி தொடக்கம் இரவு 11.00 மணிவரை விளையாடுவதற்காக அனுமதிக்கப்படுவதுடன் பொருத்தமான நேர ஒதுக்கீடுகளை முன்கூட்டியே பதிவு செய்துகொள்ளக்கூடிய வசதியும் வழங்கப்பட்டுள்ளது.
இது தவிர கிழக்கு மாகாணம் சார்பில் கடினபந்து கிரிக்கெட் போட்டியில் விளையாடும் வீரர்களை பயிற்றுவிக்கும் முகமாக கடினபந்து கிரிக்கெட் அகடமி, மோட்டார் சைக்கிள் ரேஸ் ஓட்டுனர்களுக்கான விதிமுறைகள், ஒழுக்கமிக்க வழிகாட்டல்களை பயிற்றுவிக்கும் அகடமி என்பன விரைவில் திறந்து வைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments