காத்தான்குடி பொது நூலக குழாமை பாராட்டிய ஆளுனர்.....
காத்தான்குடி நகர சபையால் பராமரிக்கப்பட்டு வரும் காத்தான்குடி பொது நூலகத்தை கிழக்கு மாகாண ஆளுனர் செந்தில் தொண்டமான் அன்மையில் பார்வையிட்டதுடன் தன்னை இந்நூலகம் மிகவும் கவர்ந்து விட்டதாகவும் தெரிவித்ததோடு, இப்பொது நூலகம் அப்பகுதி குழந்தைகள், மாணவர்கள் மற்றும் மக்களுக்கு சிறந்த சேவையை வழங்கி வருவதாகவும் தமது முகநூலில் தெரிவித்திருந்தார்.
இதன் பின் காத்தான்குடியின் நிருவாகப் பிரச்சினைகள் மற்றும் அபிவிருத்தி தொடர்பில் கலந்துரையாடல்களை மேற்கொண்டதுடன், சிறப்பான சேவையை ஆற்றியதற்காக பொது நூலக குழுவை தான் பாராட்டியதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
Comments
Post a Comment