தேசிய எல்லே போட்டியில் கிழக்கு மாகாணம் வெங்கலப் பதக்கத்தை சுவீகரித்தது.

 தேசிய எல்லே போட்டியில் கிழக்கு மாகாணம் வெங்கலப் பதக்கத்தை சுவீகரித்தது.

47வது தேசிய விளையாட்டு விழாவின் எல்லே போட்டியில் கிழக்கு மாகாணம் வென்கலப் பதக்கத்தை சுவீகரித்துள்ளது. பொலனறுவ விளையாட்டு மைதான தொகுதியில் நடைபெற்ற இப்போட்டிகளில் கிழக்கு மாகாண வீரர்கள் முதல் சுற்றில் மத்திய மாகாணத்தையும், காலிறுதிப் போட்டியில் வடமத்திய மாகாணத்தையும் தோல்வி அடையச் செய்ததுடன், அரையிறுதிப் போட்டியில் நடப்புச் சம்பியனான மேல்மாகாணத்துடன் தோல்வியைத் தழுவினர்.
எனினும் மூன்றாம் இடத்துக்கான போட்டியில் கிழக்கு மாகாண வீரர்கள் மிகச் சிறப்பாக விளையாடி தென்மாகாண அணியினரை வெற்றியீட்டிதன் மூலம் வெங்கலப் பதக்கத்தினை சுவீகரித்துக் கொண்டனர்.
இப்போட்டிகளில் கிழக்கு மாகாண சார்பில் கலந்து கொண்ட ஏறாவூர் நகர் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட எல்லே விளையாட்டு வீரர்களின் அணி கலந்து கொண்டு விளையாடி சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.


Comments