ஏறாவூர் பற்று பிரதேச செயலக உத்தியோகத்தர்களுக்கான "வெறுப்புபேச்சு" தொடர்பான விழிப்புணர்வு ............
ஏறாவூர் பற்று பிரதேச செயலக உத்தியோகத்தர்களுக்கான "வெறுப்புபேச்சு" தொடர்பான விழிப்புணர்வு ............
ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்தின் அனுசரணையில் பிரண்டினா நிறுவனத்தின் அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர் பற்று செங்கலடி பிரதேச செயலக ஏற்பாட்டில் "வெறுப்புப் பேச்சு" தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் செயலமர்வு (19) பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
பிரதேச செயலாளர் கோ.தனபாலசுந்தரமின் ஆலோசனையின் கீழ் பிரதி திட்டமிடல் பணிப்பாளர் ஏ.சுதாகரன் தலைமையில் இடம்பெற்ற இக்கருத்தரங்கில் வளவாளர்களாக ஜே.கணேசமூர்த்தி, ரி.ஜதீஷ்குமார், ஏ.சுதாகரன் ஆகியோர் செயற்பட்டனர்.
இதன்போது வெறுப்புப் பேச்சு என்றால் என்ன?, வெறுப்புப் பேச்சு என்ன வடிவங்களில் சமூகத்தில் வெளிப்படுத்தப்படுகின்றது, வெறுப்புப் பேச்சு சமூக ஊடகங்ளில் தொடர்பு படும் மற்றும் அதன் விளைவுகள் என்பன போன்ற விடயங்கள் தொடர்பில் தெளிவு படுத்தப்பட்டது.
Comments
Post a Comment