கிழக்கு ஆளுநரின் முயற்சியால் அம்பாறையில் தமிழர்கள் மீள்குடியேற்றம்....

 கிழக்கு ஆளுநரின் முயற்சியால் அம்பாறையில் தமிழர்கள் மீள்குடியேற்றம்....

இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தம் காரணமாக அம்பாறை கனகர் கிராமத்திலிருந்து இடம்பெயர்ந்த மக்களை மீள குடியமர்த்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதற்காக காணிகளை சுத்திகரிக்கும் வேலைத் திட்டமும் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் கிழக்கு மாகாண ஆளுநரின் சேவைக்கு உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் ஐ.பி.சி. தமிழ் மற்றும் லங்காசிறி ஊடக குழுமத்தின் தலைவர்  கந்தையா பாஸ்கரன் பாராட்டு தெரிவித்துள்ளார்.

1987 ஆம் ஆண்டு யுத்தத்தின் போது இராணுவத்தினரால் அம்பாறை கனகர் கிராமத்தில் உள்ள 500 ஏக்கர் நிலப்பரப்பிலிருந்து மக்கள் வெளியேற்றப்பட்டனர்.

இவ்வாறு வெளியேற்றப்பட்ட மக்களுக்கு புனர்வாழ்வு வேலைத்திட்டத்தை அமைத்து கொடுப்பதற்கான நடவடிக்கை  கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானினால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அத்துடன் குறித்த காணியில் மக்களை மீள்குடியேற்றம் செய்வதற்கான சுத்திகரிப்பு வேலைத்திட்டம் நாடாளுமன்ற உறுப்பினர் கலையரசனின் கோரிக்கையின் பேரில் உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் கந்தையா பாஸ்கரன் ஆகியோரின் ஆதரவுடன் நடைபெற்றது.











Comments