மாவட்ட செயலக சமுர்த்தி உத்தியோகத்தர்களுக்கான மீளாய்வு கூட்டம் பணிப்பாளர் தலைமையில்.....
மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் கடமையாற்றும் சமுர்த்தி உத்தியோகத்தர்களுக்கான மீளாய்வுக் கூட்டம் (05) மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் S.புவனேந்திரன் தலைமையில் நடைபெற்றது.
இக் கூட்டத்தில் சமுர்த்தி உத்தியோகத்தர்களின் ஓய்வூதிய பணி தொடர்பாகவும், இனி வரும் காலத்தில் சமுர்த்தி பணி பற்றியும், புதிய கருத்திட்டங்கள் தொடர்பாகவும், கணக்காய்வு விடயம் தொடர்பாகவும், வங்கி நடவடிக்கை தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டன.
இக் கூட்டத்தில் கணக்காளர் M.S.பஸீர் அவர்களும் சிரேஸ்ட முகாமையாளர் J.F.மனோகிதராஜ் அவர்களும் பிரிவுக்கு பொறுப்பான சமுர்த்தி முகாமையாளர்கள் மற்றும் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.
Comments
Post a Comment