மட்டு. மாவட்டத்தில் அகிம்ஷா நிறுவனத்தின் பரிந்துரையில் நிர்மாணிக்கப்பட்ட வீடு பயனாளிக்கு கையளிப்பு!
அகிம்ஷா நிறுவனத்தின் பரிந்துரைக்கு அமைவாக மட்டக்களப்பு மாவட்டத்தில் முன்னெடுத்து வரும் மனிதாபிமான சமூக நலன் சார் பணியின் கீழ், மட்டக்களப்பு மண்முனை மேற்கு வவுணதீவு பிரதேச செயலக பிரிவிற்கும்பட்ட கற்குடா மகிழவெட்டுவான் ஆயித்தியமலை கிராம சேவையாளர் பிரிவில், ஐயப்பன் பக்தர்களின் நிதி பங்களிப்பில் நிர்மாணிக்கப்பட்ட 64வது ஐயப்பன் இல்லம் பயனாளிக்கு கையளிக்கப்பட்டது.
அகிம்ஷா சமூக நிறுவனத்தின் தலைவர் விஜய ராஜாவின் பரிந்துரைக்கு அமைய, ஐயப்பன் இல்ல அறக்கட்டளையின் ஒருங்கிணைப்பாளர் என்.சந்திரமோகனின் ஒருங்கினைப்பில், கனடா ஐயப்பன் இல்ல பக்தர்களான பியர் லாட் டுகுடோ, ஐ எஸ் பாடசாலை டெமில் மாணவர்களின் அறக்கட்டளை மார்க்கம் ஒன்டோரியோ கனடா நிதி உதவியில் நிர்மாணிக்கப்பட்ட வீடு கிராம அபிவிருத்தி சங்க தலைவர் டி.அரசநாயகம் தலைமையில் கையளிக்கப்பட்டது.
கற்குடா மகிழ வெட்டுவான் கிராமத்தில் வறுமை கோட்டின் கீழ் வாழ்கின்ற ஜெயசீலன் விஜயரஞ்சினி என்ற பயனாளிக்கே வீடு கையளிக்கப்பட்டதுடன், வீட்டுக்கான ஆவணம் மற்றும் தளபாடங்களும் கையளிக்கப்பட்டன.
நிகழ்வில் கிராம சேவை உத்தியோகத்தர் டி.தயாநிதி, பங்குடாவெளி சன சமூக நிலைய தலைவர் அல்பட், கிராம அபிவிருத்தி சங்க தலைவர் டி.அரசநாயகம், அகிம்சா நிறுவன நிதிக்குழு உறுப்பினர்களான விநாயகமூர்த்தி ஜீவராஜா, புவின் ராஜ், கிராம மக்கள் என பலர் கலந்து கொண்டனர். இதேவேளை, மனிதாபிமான சமூக பணிகளை முன்னெடுத்து வரும் அகிம்ஷா சமூக நிறுவனமானது, சமூக பணியில் ஈடுபட்டு வரும் சன சமூக நிலைய தலைவர் அல்பட் மற்றும் டான் தொலைக்காட்சி ஊடகவியலாளர் அன்ரனி லியோன் ராஜ் ஆகியோருக்கு, அகிம்ஷா சமூக நிறுவனத்தின் தலைவர் விஜய ராஜாவினால் நினைவு சின்னம் வழங்கி கௌரவித்தமை குறிப்பிடத்தக்கது.
Comments
Post a Comment