மட்டக்களப்பு - வவுணதீவு பிரதேச அபிவிருத்திக் குழு கூட்டம்!!

 மட்டக்களப்பு - வவுணதீவு பிரதேச அபிவிருத்திக் குழு கூட்டம்!!

மட்டக்களப்பு - வவுணதீவு பிரதேச அபிவிருத்திக் குழு கூட்டம் - இராஜாங்க அமைச்சர் சந்திரகாந்தன் தலைமையில் இடம்பெற்றுள்ளது.
மட்டக்களப்பு - மண்முனை மேற்கு வவுணதீவு பிரதேச அபிவிருத்திக் குழு குழு கூட்டம் இன்று (11) திகதி மண்முனை மேற்கு பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
மண்முனை மேற்கு வவுணதீவு பிரதேசத்தின் அபிவிருத்திக் குழுவின் தலைவர் கிராமிய வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் தலைமையில் பிரதேச செயலாளர் எஸ்.சுதாகர் அவர்களது ஏற்பாட்டில் இடம்பெற்றது.
மண்முனை மேற்கு பிரதேச செயலக பிரிவில் மேற்கொள்ளப்பட்டுவரும் அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பாகவும் இவ்வாண்டு நடைமுறைப்படுத்துவதற்காக முன்மொழியப்பட்டுள்ள திட்டங்களுக்கான அனுமதியினை பெற்றுக்கொள்வது தொடர்பாகவும் இதன்போது விரிவாக ஆராயப்பட்டது.
மேலும் இப்பிரதேசத்தின் விவசாயம், நீர்ப்பாசனம், கல்வி, சுகாதாரம், சுற்றாடல், மீன்பிடி உட்பட்ட அனைத்து திணைக்களங்கள் சார் விடயங்களும் விரிவாக ஆராயப்பட்டதுடன் அவற்றில் காணப்படும் குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகள் தொடர்பாக இராஜாங்க அமைச்சர் சிவ.சந்திரகாந்தன் உடன் நடவடிக்கையினை மேற்கொள்ளுமாறு உரிய அதிகாரிகளை பணித்துள்ளார்.
குறித்த ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் மண்முனை மேற்கு உதவிப் பிரதேச செயலாளர், உதவித் திட்டமிடல் பணிப்பாளர், மண்முனை மேற்கு பிரதேச சபையின் செயலாளர், வவுணதீவு பொலிஸ் பொறுப்பதிகாரி உள்ளிட்ட ஏனைய திணைக்களங்களின் உயர் அதிகாரிகள் என பலரும் இதன் போது கலந்து கொண்டிருந்தனர்.
அத்தோடு பிரதேசத்தில் கால் நடைகளை விற்பனை செய்வதற்கென தனியானதொரு பொது சந்தையினை உருவாக்க வேண்டியதன் அவசியம் மற்றும் அதன் ஊடாக கால்நடை வளர்ப்பாளர்கள் அதிக இலாபத்தை அடைய வாய்ப்பாக குறித்த சந்தை அமையும் என இதன்போது இராஜாங்க அமைச்சர் சிவ.சந்திரகாந்தன் தெளிவுபடுத்தியிருந்தார்.
அத்தோடு போக்குவரத்து, விவசாயம், நீர் மற்றும் வடிகாலமைப்பு, யானை வேலி அமைப்பது தொடர்பாகவும் இதன்போது விரிவாக கலந்துரையாடப்பட்டதுடன் அவற்றிற்கான தீர்வினை பெற்றுக்கொடுப்பதற்கான ஆலோசனைகளை அதிகாரிகளுக்கு பிரதேச அபிவிருத்திகுழுவின் தலைவர் வழங்கியிருந்தர்.









Comments