பூநொச்சிமுனை மீனவர்களுக்கான நீர் விநியோகத் திட்டம்.........

 பூநொச்சிமுனை மீனவர்களுக்கான நீர் விநியோகத் திட்டம்.........

மட்டக்களப்பு பூநொச்சிமுனை மீனவர்களுக்கான நீர் விநியோகத் திட்டம் (06) ஆரம்பித்து வைக்கப்பட்டது. சுமார் 25 லட்சம் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள நீர் விநியோகத் திட்டத்தின் மூலம் பூநொச்சிமுனை மீனவர்கள் நன்மை அடைய உள்ளனர்.

தேசிய நீர் வளங்கள் வடிகாலமைப்புச் சபையின் நிதி பங்களிப்புடன் காத்தான்குடி நகர சபை, பூநொச்சிமுனை ஆழ்கடல் மீனவர் அமைப்புக்களின் உதவியுடன் நீர் விநியோகத் திட்டம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. பூநொச்சிமுனை அல்பரக்கத் கிராம மீனவர் சங்கத்தின் செயலாளரும் சமூக செயற்பாட்டாளருமான எம்.வை.ஆதம்லெவ்வை தலைமையில் இடம்பெற்ற நீர்வழங்கல் திட்டத்தை ஆரம்பித்து வைக்கும் வைபவத்தில் காத்தான்குடி நகர சபை செயலாளர் ரிப்கா ஷபீன் தேசிய நீர் வளங்கள் வடிகாலமைப்புச் சபையின் கல்லடி நீர் வளங்கள் அலுவலக பொறுப்பு அதிகாரி ரி.கிருபாகரன் அமைச்சர் ஹாபீஸ் நசீர் அகமட் அவர்களின் இணைப்புச் செயலாளர் அப்துல் நாசர் உட்பட பூநொச்சிமுனை மீனவ சங்க பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

நிகழ்வில் நகர சபை செயலாளர் ரிப்கா ஷபீன், கல்லடி நீர் வளங்கள் அலுவலக பொறுப்பு அதிகாரி ரி.கிருபாகரன் ஆகியோருக்கு பூநொச்சிமுனை மீனவர் சங்கங்களினால் நினைவுச்சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்


Comments