மட்டக்களப்பில் சமூக விழிப்புணர்வு செயற்பாடு......

 மட்டக்களப்பில் சமூக விழிப்புணர்வு செயற்பாடு......

 கிழக்கு மாகாண பண்பாட்டலுல்கள் திணைக்களமும், மண்முனை வடக்கு பிரதேச செயலகமும் இணைந்து மட்டக்களப்பு நகரில் சமூக விழிப்புணர்வு நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளது.

சிறந்த எதிர்கால சந்ததியினரை உருவாக்கும் நோக்குடன் இளைஞர் யுவதிகள் மத்தியில் கலாசார சீரழிவு, போதைப்பாவனை மற்றும் பொலித்தீன் பாவனை போன்றவற்றை தடுக்கும் வகையில் சமூக விழிப்புணர்வு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

மண்முனை வடக்கு பிரதேச செயலக கலாசார உத்தியோகத்தர்  பி.வளர்மதி தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் கலாசார பிரிவு உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர்.

போதைப்பொருள் பாவனையை தடுத்தல், பொலித்தீன் பாவனையினால் ஏற்படும் பிரச்சினைகள், மற்றும் சலாசார சீர்கேடுகள் குறித்து வீதி நாடகங்களும் அரங்கேற்றப்பட்டன.

Comments