காத்தான்குடியில் சமுர்த்தி ரண்விமன வீட்டிற்கான அடிக்கல் நடும் நிகழ்வு....
மட்டக்களப்பு காத்தான்குடி பிரதேச செயலகப்பிரிவில் சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தினால் நிர்மாணிக்கப்படவுள்ள, சமுர்த்தி ரண்விமன வீடமைப்பு வேலைத்திட்டத்திற்கான அடிக்கல் நடும் நிகழ்வு இடம் பெற்றது. இதன் போது காத்தான்குடி பிரதேச செயலாளர் U.உதயசிறீதர் அவர்கள் வீட்டிற்கான ஆரம்ப பணிகளை தொடங்கி வைத்தார்.
சமுர்த்தி ரண்விமன வீடமைப்பு வேலைத்திட்டத்தின் கீழ் ஏழு இலட்சத்து ஐம்பதாயிரம் ரூபா நிதியினை, சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களம் ஒதுக்கீடு செய்துள்ளதுடன், பயனாளி மற்றும் சமூக மட்ட அமைப்புக்களின் பங்களிப்புடன் இவ் வீடு நிர்மாணிக்கப்படவுள்ளது.
நிகழ்வில் காத்தான்குடி பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் எம்.எஸ்.சில்மியா, காத்தான்குடி பிரதேச செயலக சமுர்த்தி தலைமையக முகாமையாளர் பத்மா ஜெயராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இத்திட்டத்தின் கீழ் காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவில் 3 வீடுகள் நிர்மாணிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Comments
Post a Comment