நேர்ஷிங் மாணவர்களுக்கு முதலுதவிப் பயிற்சி முகாம்........
மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிகுடியில் இயங்கி வரும் சிலோன் கொலோஜ் ஒவ் நேர்ஷிங் மாணவர்களுக்கு கடந்த (10,11) ஆம் திகதிகளில் அடிப்படை முதலுதவிப் பயிற்சிநெறி களுவாஞ்சிகுடியில் நடைபெற்றது.
சிலோன் கொலோஜ் ஒவ் நேர்ஷிங் நிறுவனத்தின் நிறைவேற்று பணிப்பாளர் ஜே.மியூறியா டிலாணி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் இலங்கைச் செஞ்சிலுவைச் சங்கத்தின் மட்டக்களப்புக் கிளைத் தலைவர் த.வசந்தராஜா, அதன் செயலாளர் சா.மதிசுதன், சிலோன் கொலோஜ் ஒவ் நேர்ஷிங் நிறுவனத்தின் முகாமையாளர் திருமதி. பி .ராதிகா அருட்தந்தையர்களான ரவிக்குமார் மற்றும் அமலதாஸ், உள்ளிட்ட பலர் இதன்போது கலந்து கொண்டிருந்தனர்.
Comments
Post a Comment