மட்டு மாவட்ட சமுர்த்தி கிண்ணம் ஏறாவூர் நகர் பிரதேச செயலக சமுதாய அடிப்படை அமைப்பு வசம்.......

 மட்டு மாவட்ட சமுர்த்தி கிண்ணம் ஏறாவூர் நகர் பிரதேச செயலக சமுதாய அடிப்படை அமைப்பு வசம்.......

சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்புக்களை பலப்படுத்தும் நோக்குடனும் இள வயதினருக்கு விளையாட்டை விருத்தி செய்து போதைப்பொருள் பாவனையை கட்டுப்படுத்தும் முகாமாக ஒவ்வொரு பிரதேச செயலகங்கள் ரீதியாக நடாத்தப்பட்ட மென் பந்து கிரிக்கெட் போட்டியில் ஏறாவூர் பிரதேச செயலக சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்பு வெற்றி கிண்ணத்தை தனதாக்கி கொண்டது.

இள வயதினருக்கு ஒரு அழகான செய்தி எனும் சர்வதேச புகைத்தல் எதிர்ப்பு கொடி வேலைத்திட்டத்தை முன்னிட்டு மென் பந்து கிரிக்கெட் போட்டி தொடர் ஒன்று அன்மைக்காலமாகமாக நாடு பூராவும் பிரதேச செயலக மட்டத்தில் நடைபெற்று வருகின்றது. இப்போட்டிகளில் சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்புக்களின் அங்கத்தவர்கள் மற்றும் அவர்களின் பிள்ளைகள் பங்குபற்றுபதற்கான அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

 இதன் அடிப்படையில் பிரதேச செயலக மட்டத்தில் வெற்றி பெற்ற அணிகளை ஒன்று திரட்டி மாவட்ட மட்ட போட்டிகள் இறுதி நிகழ்வாகவும் நாடு பூராவும் நடாத்தி வருகின்றன. இந்த வகையில் மட்டக்களப்பு  மாவட்ட மட்ட போட்டிகள் (18) அன்று மட்டக்களப்பு சிவானந்தா தேசிய பாடசாலை மைதானத்தில் மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் S.புவனேந்திரன் தலைமையில் ஆரம்பமாகி நடைபெற்றது.

மொத்தம் 14 பிரதேச செயலகங்களில் இருந்து 14 அணிகள் கலந்துகொண்டன. இறுதி போட்டியில் மண்முனை வடக்கு பிரதேச செயலக சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்பு அணியும் ஏறாவூர் நகர் பிரதேச செயலக சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்பு அணியும் மோதிக் கொண்டன. முதலில் துடுப்பெடுத்தாடிய மண்முனை வடக்கு அணி 9.5 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 51 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது. பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஏறாவூர் நகர் அணி 9.5 ஓவர்களில் வெற்றி இலக்கை அடைந்து வெற்றி பெற்று ஐம்பதாயிரம் (50000/=) ரூபாய் ரொக்கப்பரிசையும் சமுர்த்தி  சமுதாய அடிப்படை மற்றும் சமூக அபிவிருத்தி சவால் கிண்ணத்தையும் தன்வசமாக்கி கொண்டது. 

இரண்டாமிடத்தை மண்முனை வடக்கு பிரதேச அணி பெற்றுக் கொண்டு இருபத்தி ஜயாயிரம் (25000/=) ரூபாய் பணப்பரிசையும் சமுதாய அடிப்படை மற்றும் சமூக அபிவிருத்தி சவால் கிண்ணத்தையுயும் தன்வசமாக்கி கொண்டது. 

மாலை நேரம் நடைபெற்ற இறுதி போட்டிக்கு பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட அரச அதிபர் கலாமதி பத்மராஜா அவர்கள் கலந்து கொண்டு வெற்றி கிண்ணத்தையும் பணப்பரிசில்களையும் வழங்கி வைத்தார். இந்நிகழ்வில் உதவி மாவட்ட செயலாளர் ஏ.நவேஸ்வரன், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் சசிகலா புண்ணியமூர்த்தி, மாவட்ட செயலக கணக்காளர் எம்.வினோத், ஏறாவூர் நகர பிரதேச செயலாளர்  நிஹாறா மௌஜுத், மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் Vவாசுதேவன், மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர் V.ஈஸ்வரன்ஆகியோர் கலந்து சிறப்பித்தது குறிப்பிடத்தக்க விடயமாகும்.
































Comments