மட்டக்களப்பில், குடும்ப வன்முறை தடுப்புச் சட்டம் தொடர்பில் வதிவிட பயிற்சி.....

 மட்டக்களப்பில், குடும்ப வன்முறை தடுப்புச் சட்டம் தொடர்பில் வதிவிட பயிற்சி.....

தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் கிழக்கு மாகாண உத்தியோகத்தார்களுக்கான குடும்ப வன்முறை தடுப்பு சட்டம் தொடர்பான இரண்டு நாள் வதிவிட பயிற்சி செயலமர்வு மட்டக்களப்பில் நடைபெறுகின்றது

சையில்ட் பவுண்ட் நிறுவனத்தின் நிதி பங்களிப்பின் கீழ் சிறுவர் அபிவிருத்தி நிறுவனத்தின் நிதி அனுசரணையின் கீழ் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் கிழக்கு மாகாண உத்தியோகத்தார்களுக்கு இல்லத்து வன்முறை தடுப்பு சட்டம் தொடர்பான இரண்டு நாள் வதிவிட பயிற்சி செயலமர்வு சத்துருக்கொண்டான் ஏ.எஸ்.கோ பயிற்சி நிலையத்தில் நடைபெறுகின்றது.

தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைமைக் காரியாலய பணிப்பாளர் சம்பத் குணவர்த்தன தலைமையில் நடைபெறுகின்ற, இரண்டு நாள் செயலமர்வானது சட்டத் தரணிகளின் வழிகாட்டலிலும், தொழிநுட்ப உதவியுடனும் மட்டக்களப்பு சட்ட உதவி ஆணைக்குழுவின் சட்ட உத்தியோகத்தர்கள், அம்பாறை மாவட்ட சிறுவர் பெண்கள் பொலிஸ் பிரிவு பொறுப்பதிகாரி ஆகியோர் வளவாளர்களாக கொண்டுள்ளளர்.

செயலமர்வின் ஆரம்ப நாள் நிகழ்வில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஜி.சுகுணன் கலந்து கொண்டார்.

Comments