மீண்டும் கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்கள பணிப்பாளராக சரவணமுத்து நவநீதன் நியமனம் ......
மீண்டும் கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்கள பணிப்பாளராக சரவணமுத்து நவநீதன் நியமிக்கப்பட்டுள்ளார்.
கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் புதிய மாகாணப் பணிப்பாளராக சரவணமுத்து நவநீதன் அவர்கள், (22) கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் அவர்களால் நியமிக்கப்பட்டார்.
இதற்கு முன்னர் கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளராக கடமையாற்றிய சரவணமுத்து நவநீதன் அவர்கள், கடந்த காலங்களில் பல்வேறு முன்மாதிரியான திட்டங்களை செயற்படுத்தி, விவேகமும், துடிப்புடனும் தனது சேவையை வழங்கி இருந்தார்.
இதே போல் மட்டக்களப்பு மாநகர சபையின் ஆணையாளராக இருந்த போது பல சிறந்த சேவையினை புரிந்து மட்டக்களப்பு மக்களின் பெரும் மதிப்பெற்ற சேவையாளர் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.
Comments
Post a Comment