போதைப்பொருள் தடுப்பு உத்தியோகத்தர்களுக்கான பயிற்றுனருக்கான பயிற்சி பாசறை.......
மட்டக்களப்பு மாவட்டத்தில் போதைப்பொருள் தடுப்பு உத்தியோகத்தர்களுக்கான பயிற்றுனருக்கான பயிற்சி பாசறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சுதர்சினி ஸ்ரீகாந்த் அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் மாவட்ட போதைப் பொருள் தடுப்பு உத்தியோகத்தர் ப. தினேஷ் தலைமையில் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இன்று (25) இடம் பெற்றது.
மாவட்டத்தின் 14 பிரதேச செயலகங்களில் கடமையாற்றும் போதைப்பொருள் தடுப்பு உத்தியோகத்தர்களுக்கான ஆறு மாத கால பயிற்றுனருக்கான பயிற்சி பாசறை நிகழ்வு இடம் பெறுகின்றது.
கிராம மட்டங்களில் போதைப் பொருள் பாவனையையும், அதன் மூலம் ஏற்படும் பிரச்சினைகளையும் குறைப்பதற்காக அபிவிருத்தி உத்தியோகத்தர்களை வலுப்படுத்தும் செயலமர்வாக இடம் பெற்றது.
கிராம, பிரதேச மட்டத்தில் போதைப்பொருள் பாவனையை தடுப்பதற்கு தேவையான உளவள ஆலோசனை இதன் போது வழங்கப்பட்டது.
இந் நிகழ்வில் வளவாளராக மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலைய சிரேஷ்ட நிகழ்ச்சி அதிகாரி ஏ.சி.றஹீம் மற்றும் உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.
Comments
Post a Comment