காத்தான்குடியில் இரு பயனாளிகளுக்கு ஆடுகள் வழங்கப்பட்டன....

காத்தான்குடியில் இரு பயனாளிகளுக்கு ஆடுகள் வழங்கப்பட்டன....

மட்டக்களப்பு காத்தான்குடி பிரதேச செயலகத்தினால் இரண்டு பயனாளிகளுக்கு ஆடுகள் வழங்கப்பட்டன.  பின்தங்கிய கிராமிய பிரதேச வீட்டு கால் நடை வளர்ப்பு மற்றும் சிறு பொருளாதார பயிர்ச் செய்கை இராஜாங்க அமைச்சின் ஆடு வளர்ப்பு திட்டத்தின் கீழ், இந்த ஆடுகள் வழங்கப்பட்டன.

ஆடுகளை வழங்கி வைக்கும் வைபவத்தில் காத்தான்குடி பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் எம்.எஸ்.சில்மியா, கால்நடை உற்பத்தி சுகாதார திணைக்களத்தின் அம்பாறை மாட்ட பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் மாஹீர், காத்தான்குடி கால் நடை வைத்திய அலுவலகத்தின் உத்தியோகத்தர், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர். இதன் போது ஒரு பயனாளிக்கு 3 ஆடுகள் வீதம் வழங்கி வைக்கப்பட்டன.

Comments