படுவான்கரை பிரதேச மாணவர்களின் கல்விக்கு கரம் கொடுத்த ஹெல்ப் எவர் அமைப்பு....

 படுவான்கரை பிரதேச மாணவர்களின் கல்விக்கு கரம் கொடுத்த ஹெல்ப் எவர் அமைப்பு....

படுவான்கரை பிரதேசத்திலே மிகவும் பின்தங்கிய பாடசாலையான மட்/ குழுவினமடு விநாயகர் வித்தியாலய அதிபரின் வேண்டுகோளிற்கிணங்க அப் பாடசாலை மாணவர்களுக்கு, DreamSpace Academy இன் நிதிப்பங்களிப்பின் மூலம் கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது. இச் செயற்திட்டத்தை முன்னால் கோட்டக்கல்விப் பணிப்பாளர் தயாசீலன் அவர்கள்  ஒழுங்குபடுத்தி இருந்தது குறிப்பிடத்தக்க விடயமாகும்.

இதே வேளை பசுமைப்புரட்சியை ஏற்படுத்தி வரும்  ஹெல்ப் எவர் அமைப்பினரால்   பாடசாலை வளாகத்தில் மரக்கன்றுகளும் நடப்பட்டது குறிப்பிடத்தக்க விடயமாகும்.








Comments