மண்முனை வடக்கில் வீட்டுத் திட்டம் தொடர்பான கலந்துரையாடல்.......
மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட சத்துருக்கொண்டான் கிராம உத்தியோகத்தர் பிரிவில் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் செயற்படுத்தப்பட்ட வீட்டு திட்டம் தொடர்பான கலந்துரையாடல் மண்முனை வடக்கு பிரதேச செயலக மண்டபத்தில் இடம்பெற்றது.
பிரதேச செயலாளர் வி.வாசுதேவன் தலைமையில் இடம்பெற்ற கலந்துரையாடலில், பிரதேச அபிவிருத்தி குழு தலைவரும் இராஜாங்க அமைச்சருமான எஸ்.வியாழேந்திரன், தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை அதிகாரி, பொறியிலாளர், கிராம சேவை உத்தியோகத்தர், வீட்டு திட்ட பயனாளிகள் என பலர் கலந்து கொண்டனர்.
வீட்டுத்திட்ட பயனாளிகளால் முன்வைக்கப்பட்ட அத்தியாவசிய தேவைகளுக்கு அமைய வீட்டு திட்டத்துக்கான வீதி, மின்சாரம் மற்றும் குடிநீர் போன்ற அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்கப்பட உள்ளதாக இதன் போது இராஜாங்க அமைச்சரினால் தெரிவிக்கப்பட்டது.
Comments
Post a Comment