மட்டக்களப்பில் ஆசிரியர்களுக்கான ஆளுமை விருத்தி செயலமர்வு..........

 மட்டக்களப்பில் ஆசிரியர்களுக்கான ஆளுமை விருத்தி செயலமர்வு..........

ஓசியன் ஸ்டார்ஸ் நிதியத்தின் ஊடாக பின்தங்கிய நிலையில் உள்ள பாலர் பாடசாலை மாணவர்களின் கல்வி மேம்பாட்டிற்கான, பல்வேறு செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இதன்கீழ் நாடெங்கிலும் 30 பாடசாலைகள் ஓசியன் ஸ்டார்ஸ் லங்கா நிதியத்தின் ஊடாக நடாத்தப்பட்டுவருகின்ற நிலையில், அதில் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கான ஆளுமை விருத்தி மற்றும் திறனை கட்டியெழுப்பும் வகையிலான மூன்று நாள் செயலமர்வு இன்று (21) மட்டக்களப்பில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

ஓசியன் ஸ்டார்ஸ் நிதியம் மற்றும் பொன்தில் லண்டன் ஆகியவற்றின் அனுசரணையுடன், இந்த பயிற்சி செயலமர்வு மட்டக்களப்பு தன்னாமுனை மியானி மண்டபத்தில் ஆரம்பித்துள்ளது.

மட்டக்களப்பு, திருகோணமலை, யட்டியாந்தோட்ட, கிளிநொச்சி, கொழும்பு ஆகிய மாவட்டங்களிலிருந்து சுமார் 80 ஆசிரியர்கள் இந்த பயிற்சி செயலமர்வில் கலந்து கொண்டனர்.

ஆசிரியர்களின் திறனையும் தலைமைத்துவ பண்பை வளர்ப்பதன் மூலம், சிறந்த மாணவர் சமூகத்தினை உருவாக்கும் நோக்குடன் இப் பயிற்சி நெறி நடாத்துப்படுவதாக, ஓசியன் ஸ்டார்ஸ் நிதியம் லங்கா அமைப்பின் முன்பள்ளி முகாமையாளர் டிசாந்தினி தெரிவித்தார்.

ஓசியன் ஸ்டார்ஸ் நிதியத்தின் ஸ்தாபகர் டிலானி பன்டர் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், ஓசியன் ஸ்டார்ஸ் நிதியம் லங்கா அமைப்பின் உதவி பணிப்பாளர் ஷாலினி பத்மராஜா, அமைப்பின் முன்பள்ளி முகாமையாளர் டிசாந்தினி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Comments