தாழங்குடாவில் நடமாடும் சேவை..........

தாழங்குடாவில் நடமாடும் சேவை..........

கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான்  அவர்களின் வழிகாட்டலில், கிழக்கு மாகாண சமூக சேவைகள் மற்றும் சுகாதாரம் சுதேச வைத்திய அமைச்சினால் நடமாடும் சேவைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இத்திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மண்முனைப் பற்று பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள தாழங்குடாவில், இந்த நடமாடும் சேவை இடம்பெற்றது.

மண்முனை பற்று பிரதேச செயலாளர் சத்தியானந்தி நமச்சிவாயம் இச்சேவையை ஆரம்பித்து வைத்தார். நடமாடும் சேவையில் பிரதேச செயலகத்தின் பல்வேறு சேவைகள் வழங்கப்பட்டதுடன், பொலிஸ் சேவை, ஆயுர்வேத வைத்தியம், சமூக சேவை நிலையத்தின் சேவைகளும் வழங்கப்பட்டன

இதன் போது சமூக சேவை திணைக்களத்தினால் விஷேட தேவை உடையவர்களுக்கான ஊன்றுகோலும் வழங்கப்பட்டதுடன், கண் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டல்களும் வழங்கப்பட்டன.

பிரதித் திட்டமிடல் பணிப்பாளர் மனோகரி ஜெயச்சந்திரன், மாவட்ட சமூக சேவை உத்தியோகத்தர் சாரங்கப்பாணி அருள்மொழி உட்பட பலரும் நடமாடும் சேவையில் கலந்து கொண்டனர்.











Comments