உயிரிழந்த மாணவரின் பட்டத்தை கண்ணீருடன் பெற்ற தாய்.......
உயிரிழந்த மகனின் பட்டப்படிப்புச் சான்றிதழை கண்ணீருடன் தாய் ஒருவர் பெற்றுக்கொண்ட சம்பவம் யாழ் பல்கலைக்கழகத்தில் பதிவாகியுள்ளது.
யாழ்.பல்கலைக்கழகத்தின் 37வது பட்டமளிப்பு விழா நேற்று (20) இடம்பெற்றதுடன், இந்த உணர்வுபூர்வமான நிகழ்வும் அங்கு இடம்பெற்றது.
மதவாச்சியைச் சேர்ந்த தாயொருவர் இவ்வாறு தனது மகனின் பட்டத்தை பெற்றுள்ளார், மேலும் அவர் யாழ்.பல்கலைக்கழகத்துடன் இணைந்த வவுனியா வளாகத்தில் கல்வி பயின்ற திஸாநாயக்க முதியன்சலாகே ஹசான் சாகர திசாநாயக்க என்ற மாணவராவார். மதவாச்சி பிரதேசத்தை வசிப்பிடமாக கொண்ட பிரயோக கணிதம் மற்றும் கணனி விஞ்ஞானம் ஆகிய பாடங்களை பயின்ற ஹசான் சாகர திஸாநாயக்க வாகன விபத்தில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஹசானின் பட்டமளிப்பு நிகழ்வு உணர்வுபூர்வமான நிகழ்வாக அமைந்ததுடன், பல்கலைக்கழக ஆசிரியர்கள் மற்றும் சிறுவர்களும் இருக்கையில் இருந்து எழுந்து ஹசானை நினைவு கூர்ந்தனர்.
Comments
Post a Comment