களுதாவளை கூடைப்பந்தாட்ட போட்டியில் சிவானந்தா வெற்றி...
பெர்னாண்டோ ஞாபகார்த்தமாக களுதாவளை கூடைப்பந்தாட்ட மேம்பாட்டுக் கழகத்தால் நடாத்தப்பட்ட கூடைப்பந்தாட்ட சுற்றுப்போட்டியில் சிவானந்தா விளையாட்டு கழகம் முதலாம் இடத்தைப் பெற்று சாதனை வெற்றியை பதிவிட்டுக் கொண்டது.
08 அணிகள் பங்குபற்றிய இச்சுற்றுப்போட்டியில் இறுதிப்போட்டிக்கு மட்டக்களப்பு சிவானந்தா விளையாட்டு கழகமும் தன்னாமுனை சென் ஜோசப் விளையாட்டுக் கழகமும் மோதிக் கொண்டன. இதில் சிவானந்தா விளையாட்டு கழகம் 47:61 என்கின்ற கணக்கில் வெற்றியை தனதாக்கி கொண்டது. மட்டக்களப்பு சிவானந்தா விளையாட்டு கழகத்திற்கு கோபாலப்பிள்ளை சாத்வீகம் அணி தலைவராக செயற்பட்டார், இவர்களுக்கு முப்பதாயிரம் ரூபாய் (30000/=) பணப்பரிசும் வெற்றி கின்னமும் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்க விடயமாகும்.
Comments
Post a Comment