எரிவாயுவின் விலைகளை சமமாக இருக்கும் வகையில் விலை சூத்திரத்தை அறிமுகப்படுத்த நடவடிக்கை .
லாஃப்ஸ் மற்றும் லிட்ரோ எரிவாயுவின் விலைகளை சமமாக இருக்கும் வகையில் விலை சூத்திரத்தை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.சந்தையில் லிட்ரோ எரிவாயுவின் விலையுடன் ஒப்பிடும் போது லாஃப்ஸ் எரிவாயுவின் விலைகள் அதிகம் என அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த நிலைமை குறித்து லாஃப்ஸ் எரிவாயு நிறுவனத்துடன் கலந்துரையாடியதாகவும், விலை திருத்தம் தொடர்பான ஒப்பந்தத்தை அடுத்த வாரத்திற்குள் வழங்குவதாக அந்த நிறுவனம் உறுதியளித்ததாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இதன்படி, எதிர்காலத்தில் லாஃப்ஸ் எரிவாயு விலை சூத்திரத்தை அறிமுகப்படுத்த எதிர்பார்க்கப்படுவதாக வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இறக்குமதி செய்யப்படும் முட்டைகளை அடுத்த சில வாரங்களில் சந்தைக்கு விநியோகிக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இறக்குமதி செய்யப்படும் தேங்காய் எண்ணெய்க்கான தற்போதைய வரியை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
உள்ளூர் தேங்காய் எண்ணெய் உற்பத்தியாளர்களை பாதுகாக்கும் நோக்கில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
Comments
Post a Comment