வெளிநாடு செல்ல விடுமுறை – ஊழியர்களுக்கு எச்சரிக்கை..........
தொழில் நிமித்தம் வெளிநாடு செல்வதற்காக விடுமுறை பெற்றுள்ள பொதுத்துறை ஊழியர்கள் முறையான வழிகளில் இலங்கைக்கு பணத்தை திருப்பி அனுப்பத் தவறினால், சலுகைகளில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்படுவார்கள் என்று எச்சரிக்கப்பட்டுள்ளனர். நிதி அமைச்சகம் இந்த முடிவை அறிவித்துள்ளது.முறையான வழிகளில் பணத்தை அனுப்பத்தவறினால், மேலதிகமாக பொது நிர்வாக அமைச்சின் சுற்றறிக்கையின் பிற உட்பிரிவுகளின் நன்மைகளையும் அவர்கள் இழக்க நேரிடும் என்று திறைசேரி செயலாளர் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார்.
இதற்கயைம, முன்னதாக விடுமுறை பெற்றுள்ள அரச பணியாளர்களின் பணிமூப்பின் போது அவர்களின் விடுமுறைக் காலம் பரிசீலிக்கப்படமாட்டாது என ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில் தற்போது இவ்வாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Comments
Post a Comment