மட்டக்களப்பின் சில அரியபுகைப்படங்கள் அதன் தற்போதைய நிலையை பார்ப்போமா?
மட்டக்களப்பின் அரிய புகைப்படங்கள் என சில புகைப்படங்கள் என் கண்ணில் தென்பட்டன, அதை நான் இது என்ன இடங்கள் என தேடலாம் என பலருடன் கலந்தாலோசித்து சில புகைப்படங்களின் விபரங்களை தேடியும் அதன் தற்போதைய நிலை பற்றியும் கண்டறிந்துள்ளேன். அதை தங்களுடன் பகிர ஆசைப்படுகின்றேன்.
1. முதலாவது புகைப்படம் : இது தான் தெரியுமா? வந்து பாருங்களன்.
இப்புகைப்படமானது கோட்டைமுனை பாலத்தின் வலது புறமாக செல்லும் வீதியாகும். இவ்வீதி கல்லடி பாலத்தை சென்றடையும், இவ்வீதிக்கு லேடி மனிங் றைவ் என பெயர் சூட்டப்பட்டுள்ளது. அரசடி சந்தியில் இருந்து வரும் பயனியர் வீதியையும் இந்த லேடி மனிங் றைவ் வீதியையும் இணைக்கும் சந்தியில் வைத்தே இந்த புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. தற்போது இச்சந்தியில் மட்டக்களப்பு மோட்டார் போக்குவரத்து தினைக்களத்தின் அலுவலகம் அமைந்துள்ளது.
அதே போல் இந்த புகைப்படத்தில் தெரியும் சிறிய மதகு இப்பவும் அதே போல் உள்ளது, வடிகாண் மாத்திரம் சற்று தள்ளி வெளியே வந்துள்ளது. இப்படத்தை நன்றான உற்று நோக்கினால் கோட்டைக்கு இடதுபுறமாக ஒரு கட்டிடம் தெரிகின்றது, இது பாரி.அந்திரேயா ஆலயம் தான். இவ்வாயம் தற்போது வெபர் மைதானத்திற்கு முன்பாகவும் நீதிமன்ற கட்டிடத்திற்கு இடதுபுறமாக இருக்கின்றது இந்த ஆலயம் 1891.10.11 கட்டப்பட்டதாக வரலாறு கூறுகின்றது ஆகவே இப்புகைப்படம் 1891ம் ஆண்டுகளின் பிற்பகுதியில் தான் எடுக்கபட்டருக்கலாம் என தோண்றுகின்றது.
புதிதாக நாம் எடுத்த புகைப்படத்தில் மரங்கள் வளர்ந்தும் கட்டிடங்கள் கட்டப்பட்டும், முற்றும் மாற்றத்துடன் காணப்படுகின்றது. இதில் இருக்கும் மதகில் அக்காலத்தில் இருவர் இருப்பது போன்று புகைப்படம் எடுக்கப்பட்டிருந்தது, நானும் அவ்மதகில் இருந்து புகைப்படத்தை எடுத்துக் கொண்டேன்.
மற்றுமொரு விடயம் என்னவென்றால் கோட்டையின் வலதுபுறமாக இருக்கும் காவல் அரணில் நின்று பார்த்தால் பயணியர் வீதியூடாக, அரசடி வீதியை தாண்டி, பார்வீதியூடாக, சிலாமுனை சந்தி தெரிவதற்காகவே இந்த முழு நீள பாதை அக்காலத்தில் வடிவமைக்கப்பட்டதாக கூறப்படுகின்றது உண்மையில் நான் ஏறி நின்று பார்த்த போது மரங்கள், கட்டிடங்கள் அதை மறைத்து நின்றதை அவதானிக்க முடிந்தது.
இன்னும் சில படங்கள் உள்ளன தேடல் தொடர்கின்றது உங்களை வந்தடையும்.
லேடி மனிங் றைவ் பயனியர் வீதி சந்திக்கும் இடம்
Comments
Post a Comment