மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலக சமூக சேவைகள் பிரிவினால் நடமாடும் சேவை.............
கௌரவ கிழக்கு மாகாண ஆளுனரினால் பணிக்கப்பட்டதற்கமைவாக கிழக்கு மாகாண சுகாதார மற்றும் சமூக சேவை அமைச்சின் பணிப்புரைக்கமைவாக மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலக சமூக சேவைகள் பிரிவினால் ஒழுங்குபடுத்தப்பட்ட நடமாடும் சேவையானது பிரதேச செயலாளர் சிவப்பிரியா வில்வரத்னம் அவர்களின் தலைமையில் பெரியகல்லாறு விநாயகர் வித்தியாலயத்தில் (29) சனிக்கிழமை காலை 9.00 மணி தொடக்கம் பிற்பகல் 4.00 மணி வரை நடைபெற்றது.
இவ் நடமாடும் சேவையில் பிரதேச செயலகம் சார்பாக:
1. பொதுசன மாதாந்த உதவிக் கொடுப்பனவு விண்ணப்பம்
2. புற்று நோய், தலசிமியா, சிறுநீரக நோய், கசநோய், தொழு நோய் விண்ணப்பங்கள்
3. மாற்றுத்திறனாளி, முதியோர்க்கான மூக்கு கண்ணாடிகள், சக்கர நாற்காலி, முச்சக்கர வண்டிகள், ஊன்று கோல்கள், காது கேள் கருவிகள், நடைச்சட்டம் போன்ற உபகரணங்களுக்கான விண்ணப்பங்கள்
4. 12 வயதுக்குட்பட்ட மூளை வளர்ச்சியற்ற குழந்தைகளுக்கான விண்ணப்பம்
5. மாற்றுத்திறனாளிக்கான வாழ்வாதார கொடுப்பனவு விண்ணப்பங்கள்
6. மாற்றுத்திறனாளிக்கான அணுகும் வசதி கொடுப்பனவு விண்ணப்பங்கள்
7. முதியோர் அடையாள அட்டை விண்ணப்பங்கள்
8. சமுர்த்தி கொடுப்பனவு
9. அரச காணி விடயங்கள்
10. பிறப்பு, இறப்பு மற்றும் திருமணப்பதிவு கோரிக்கை விண்ணப்பங்கள்
11. தேசிய அடையாள அட்டை கோரிக்கை விண்ணப்பங்கள்
12. சிறுவர், பெண்கள் மற்றும் முன்பிள்ளைகள் தொடர்பான சேவைகள் வழங்கப்பட்டதுடன்
சுகாதார வைத்திய அலுவலகம்இ பெரியகல்லாறு வைத்தியசாலை மற்றும் சுதேச மருத்துவஇ ஆயுர் வேத வைத்தியம் ஆகிய திணைக்களங்களும் கலந்துகொண்டு மக்களுக்கான சேவைகளை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Comments
Post a Comment