'இள வயதினருக்கு ஒரு அழகான செய்தி' கிரிக்கெட் போட்டி.....
இள வயதினருக்கு ஒரு அழகான செய்தி எனும் சர்வதேச புகைத்தல் எதிர்ப்பு கொடி வேலைத்திட்டத்தை முன்னிட்டு மென் பந்து கிரிக்கெட் போட்டி தொடர் ஒன்று அன்மைக்காலமாகமாக பிரதேச செயலக மட்டாத்தில் நடைபெற்று வந்தது. இப்போட்டிகளில் சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்புக்களின் அங்கத்தவர்கள் மற்றும் அவர்களின் பிள்ளைகள் பங்குபற்றுபதற்கான அனுமதி வழங்கப்பட்டிருந்தது.
இதன் அடிப்படையில் பிரதேச செயலக மட்டத்தில் வெற்றி பெற்ற அணிகளை ஒன்று திரட்டி மட்டக்களப்பு மாவட்ட மட்ட போட்டிகள் எதிர்வரும் 18.07.2023 அன்று மட்டக்களப்பு சிவானந்தா தேசிய பாடசாலை மைதானத்தில் நடாத்தப்படவுள்ளது. இதில் வெற்றி பெறும் அணிக்கு ஐம்பதாயிரம் (50000/=) ரூபாய் ரொக்கப்பரிசும் சமுதாய அடிப்படை மற்றும் சமூக அபிவிருத்தி வெற்றி கிண்ணமும். இரண்டாமிடத்தை பெறும் அணிக்கு இருபத்தி ஜயாயிரம் (25000/=) ரூபாய் பணப்பரிசும் சமுதாய அடிப்படை மற்றும் சமூக அபிவிருத்தி வெற்றி கிண்ணமும் வழங்கப்படவுள்ளது.
Comments
Post a Comment