அஸ்வெசும திட்டத்துடன் சமுர்த்தி திட்டத்தை செயற்படுத்தல் தொடர்பான செயலமர்வு....
நாட்டில் தற்போது நடைமுறைப்படுத்தப்படவுள்ள அஸ்வெசும நலனுதவி திட்டத்துடன் இணைந்தவகையில் சமுர்த்தி திட்டத்தினை செயற்படுத்தல் தொடர்பான செயலமர்வுகள் தற்போது நாடுபூராவும் நடைபெற்று வருகின்றன.
இந்த வகையில் தற்போதைய சமுர்த்தி திட்டம் எவ்வாறான செயற்பாடுகளை இனிவரும் காலங்களில் முன்னெடுக்கப்படவுள்ளது தொடர்பாக மட்டக்களப்பு மாவட்டத்திலும் இச்செயலமர்வு மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் S.புவனேந்திரன் தலைமையில் மட்டக்களப்பு டேபா மண்டபத்தில் இன்று (25) நடைபெற்றது.
இச்செயலமர்வில் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள சமுர்த்தி முகாமையாளர்கள், சமுர்த்தி வலய உதவியாளர்கள், சமுர்த்தி வங்கிசங்க கட்டுப்பாட்டுச்சபை தலைவ்ர்கள் மற்றும் சமுர்த்தி வங்கிச்சங்க நிறைவேற்றுக் குழுத்தலைவர்களும் கலந்து கொண்டனர்.
இச்செயலமர்வு தற்போது மாவட்ட மட்டத்தில் நடாத்தப்பட்டு பின்னர் பிரதேச செயலக மட்டத்திலும், வலயமட்டத்திலும் நடைபெறவுள்ளது.
Comments
Post a Comment