தற்காலிக அரச ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்க விசேட குழு நியமனம் - சுகாதாரத்துறை அமைச்சர்........

 தற்காலிக அரச ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்க விசேட குழு நியமனம் - சுகாதாரத்துறை அமைச்சர்........

டெங்கு ஒழிப்புப் பிரிவு ஊழியர்கள் உட்பட அரச சேவையில் பல துறைகளில் சேவையில் உள்ள 18000 தற்காலிக சேவையாளர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்குவது தொடர்பில் விரைவில் இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் என சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் (18) இடம்பெற்ற அமர்வின் போது எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் உரையாற்றியதாவது, சுகாதார அமைச்சின் டெங்கு ஒழிப்பு பிரிவு ஊழியர்கள் உட்பட அரச சேவையில் பல துறைகளிலும் உள்ள தற்காலிக ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்குவது தொடர்பில் உரிய கவனம் செலுத்தப்பட்டு பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
அத்துடன் இவ்விடயம் தொடர்பில் நான்கு அமைச்சரவைப் பத்திரங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. தற்காலிக சேவையாளர்களுக்கு சேவையாளர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்குவது தொடர்பில் ஆராய்வதற்கு அமைச்சரவை உறுப்பினர்களை உள்ளடக்கிய குழு ஒள்று நியமிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய 18 ஆயிரம் ஊழியர்கள் தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் பல்வேறு துறைகளில் காணப்படுவதுடன் அவர்கள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தி பிரதமர் தினேஷ் குணவர்தனவின் தலைமையில் பாராளுமன்ற கட்டிடத்தில் கூடி இறுதித் தீர்வு ஒன்றை மேற்கொள்வதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறெனினும் இது ஒரு அரசியல் பிரச்சனையல்ல. இது ஒரு மனிதாபிமான பிரச்சினை என்பதால் அந்த நோக்கத்தில் இந்த பிரச்சனை பார்க்கப்படும். இந்தப் பிரச்சினையை தீர்க்க வேண்டும் என்பதில் நான் உட்பட அனைவரும் ஒரே நிலைப்பாட்டில் உள்ளோம் என்றார்.

Comments