ஒரு நொடியில் நிகழ்ந்த சம்பவம்:மரம் விழுந்து மூவர் பலி!
இன்று (22) காலை பலத்த காற்றினால் அமலகொட சந்தி பகுதியில் உள்ள கராஜ் ஒன்றிற்கு அருகில் உள்ள மரமொன்று முறிந்து வீழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்போது, அருகில் இருந்த 05 பேர் வீழ்ந்த மரத்தில் சிக்கியதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
அவர்களில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன், மற்றுமொருவர் அக்குரஸ்ஸ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார். அக்குரஸ்ஸ பிரதேசத்தில் வசிக்கும் 65 மற்றும் 28 வயதுடைய இருவரே உயிரிழந்துள்ளனர்.
காயமடைந்த ஏனைய மூவரும் மேலதிக சிகிச்சைக்காக கராப்பிட்டிய போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது அக்குரஸ்ஸ, அமலகொட பிரதேசத்தில் மரம் முறிந்து விழுந்ததில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 03 ஆக அதிகரித்துள்ளது. சம்பவத்தில் பலத்த காயங்களுடன் கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
காயமடைந்த ஏனைய இருவரும் தற்போது கராப்பிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
Comments
Post a Comment