மட்டக்களப்பில் மாற்றுதிறனாளிகளுக்கு உதவி தொகை வழங்கி வைப்பு.......
மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள மாற்று திறனாளிகளுக்கு உதவித் தொகையினை கிழக்கு மாகாண ஆளுனர் செந்தில் தொண்டமான் அவர்களால் வழங்கி வைக்கப்பட்டது.
மாற்று திறனாளிகளுக்கான உதவி தொகை மற்றும் அவர்களுக்கு தேவையான பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டதுடன் ஆளுனர் நந்தவனம் முதியோர் இல்லம், அட்வேட் முதியோர் இல்லம், கிழக்கு இஸ்லாமிய மாற்றுத்திறனாளிகள் இல்லம், முஸ்லிம் முதியோர் இல்லம் போன்றவற்றினையும் பார்வையிட்டு, அங்கு நடைபெறும் நிர்மாணப் பணிகளுக்கும் நிதியுதவி வழங்கி வைத்தார். இத்துடன் அங்கு இருக்கும் மாற்றுதிறனாளிகளுடன் கலந்துரையாடினார்.
இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாநகரசபையின் ஆணையாளர் எந்திரி என்.சிவலிங்கம், மட்டக்களப்பு மாவட்ட சமூகசேவை உத்தியோகத்தர் சா.அருள்மொழி ஆகியோர் கலந்து கொண்டனர்.
Comments
Post a Comment