மண்டூர் கணேசபுரம் சக்தி மகா வித்தியாலயத்தில் பொருட் கண்காட்சி....

மண்டூர் கணேசபுரம் சக்தி மகா வித்தியாலயத்தில் பொருட் கண்காட்சி....

மட்டக்களப்பு மாவட்டத்தின் பட்டிருப்பு வலயத்திற்குட்பட்ட மண்டூர் 14ம் கிராமம் சக்தி மகா வித்தியாலயத்தில் அதிபர் ஆசிரியர்கள் மாணவர்களினின் ஏற்பாட்டில் பொருட் கண்காட்சி மிகச்சிறப்பாக இடம்பெற்றது.

பாடசாலையின் அதிபர் வீ.சௌஜன் தலைமையில் நடைபெற்ற இக்கண்காட்சியில் பட்டிருப்பு வலயக்கல்வி பணிப்பாளர் எஸ்.சிறிதரன் பிரதம அதிதியாக கலந்து கொண்டார். சித்திரங்களும் வரலாற்று ரீதியான ஆட்சிக்காலங்களின் சுவடுகளும், பண்டைய வாழ்வியல் முறைகள், விவசாய செய்கையின் பரிமாணங்கள், தமிழர் பாரம்பரிய வைத்திய முறைகள், விஞ்ஞான நுணுக்கங்கள், தொழில்நுட்ப சாதனங்கள், வழிபாட்டு முறைகள் என பல விடயங்களும் பாடரீதியான பொருட்களும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

Comments