விளையாட்டு துறை உத்தியோகத்தர்களுக்கான பயிற்சி செயலமர்வு நிறைவு.....

 விளையாட்டு துறை உத்தியோகத்தர்களுக்கான பயிற்சி செயலமர்வு நிறைவு.....

விளையாட்டுத்துறை அமைச்சுடன் தேசிய விளையாட்டு விஞ்ஞான நிறுவனம் கிழக்கு மாகாண விளையாட்டு திணைக்களம் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட செயலகம் இணைந்து நடத்திய விளையாட்டுத்துறை பயிற்றுவிப்பாளர்களுக்கான ஐந்து நாள் பயிற்சி செயலமர்வு 25ம் திகதி ஆரம்பமாகி  29ம் திகதி நிறைவு பெற்றது. இச்செயலமர்வானது மட்டக்களப்பு வெபர் உள்ளக அரங்கில் நடைபெற்றது.

மாவட்ட அரசாங்க அதிபர் கலாநிதி பத்மராஜா தலைமையில், மேலதிக அரசாங்க அதிபர் சுதர்ஷினி ஸ்ரீகாந்த் மற்றும் கிழக்கு மாகாண விளையாட்டு துறை பணிப்பாளர் என்.எம்.நௌபீஸின் ஆலோசனை மற்றும் வழிகாட்டலில் கீழ் ஆரம்பமான இச்செயலமர்வு இணைப்பாளர் எம்.வை.ஆதாம் லெப்பை மற்றும் மாவட்ட விளையாட்டு துறை உத்தியோகத்தர் வே.ஈஸ்வரன் ஆகியோரின் ஒழுங்கமைப்பில் நடைபெற்றது. 

ஐந்து நாள் இடம் பெற்ற திறன் அபிவிருத்தி பயிற்சி செயலமர்வில், விளையாட்டுத்துறை சார் உத்தியோகத்தர்கள், விளையாட்டு துறை பயிற்றுவிப்பாளர்கள், பாடசாலைகளின் உடற்கல்வி ஆசிரியர்கள், விளையாட்டுக் கழகங்களின் விளையாட்டுத்துறை பயிற்றுவிப்பாளர்கள் போன்றோர் கலந்து கொண்டு அவர்களது திறமையை வெளிக்காட்டி இருந்தனர்.

29ம் திகதி நிறைவுக்கு வந்த இச்செயலமர்வில் கலந்து கொண்டோருக்கான சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்டசெயலக அதிகாரிகள், கல்வி வலய உயர் அதிகாரிகள் கலந்து கொண்டு சான்றிதழை வழங்கி வைத்தது குறிப்பிடத்தக்க விடயமாகும்.

















Comments