மட்டு இந்துக்கல்லூரி மாணவர்களுக்கு உளநல வலுவூட்டல் கருத்தரங்கு....
மட்டக்களப்பு இந்துக்கல்லூரியில் கல்வி கற்கும் மாணவர்களுக்கான 'உறுதிப் பாட்டினூடாக மாணவர்களின் உளநல வலுவூட்டல்' எனும் தலைப்பின் கீழ் (10) அன்று மட்டக்களப்பு கல்வி வலய ஆலாேசனை வழிகாட்டல் பிரிவின் ஒருங்கினணப்பில் கருத்தரங்கு நடைபெற்றது. இக்கருத்தரங்கின் பிரதான வளவாளராக அவுஸ்திரேலியா நாட்டில் உளநல வைத்திய நிபுணராக கடமை புரியும் எமது நாட்டைச் சேர்ந்த DR.அகிலன் அவர்கள் விரிவுரை வழங்கி இருந்தார்.
மட்டக்களப்பு இந்துக்கல்லுரியின் அதிபர் K.பகிரதன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இக்கருத்தரங்கில் மாணவ சமூகத்தற்கு தற்போதை கால கட்டத்திற்கு ஏற்றவாறு மிகவும் பயனுறுதி வாய்ந்த பல கருத்துரைகள் வழங்கப்பட்டிருந்ததுடன், மாணவர்களுடன் மிகவும் நேர்த்தியான முறையில் கலந்துரையாடப்பட்டது குறிப்பிடத்தக்க விடயமாகும்.
Comments
Post a Comment