மட்டக்களப்பில் தேசிய டெங்கு ஒழிப்பு வாரம் நடைமுறை......

 மட்டக்களப்பில் தேசிய டெங்கு ஒழிப்பு வாரம் நடைமுறை......

மட்டக்களப்பு மாவட்டத்தில் தேசிய டெங்கு ஒழிப்பு வாரம் பிராந்திய சுகாதார பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஜீ.சுகுணன் தலைமையில் சுகாதார வைத்திய அதிகாரி பிரசாந்தி லதாகரன் வழி காட்டலின் கீழ் வலையிரவு சுகாதார பரிசோதகர் பிரிவில் இன்று (14) மேற்கொள்ளப்பட்டது.
திமிலைதீவு, புதூர், கிராம சேவகர் பிரிவில் டெங்கு நுளம்புகள் பெருக்கத்தை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
இதன் போது பாடசாலைகள், ஆலயங்கள், பொது நிலையங்கள், வீடுகள், கிணறுகள் என்பன ஆய்வுக்கூட்படுத்தப்பட்டதுடன் நீர் தேங்கக்கூடிய யோகட் கப், பிளாஸ்டிக் மற்றும் கண்ணாடி போத்தல்கள், சிரட்டைகள், தகரப் பேணிகள் போன்ற ஏராளமான கொள்கலன்களை சேகரிக்கும் செயற்பாடு மேற்கொள்ளப்பட்டது.
டெங்கு பரவும் வகையில் காணப்பட்ட இடங்களின் உரிமையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளபட்டுள்ளது.
இந் நிகழ்வில் பொது சுகாதார பரிசோதகர்,கிராமசேவகர், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், முப்படையினர், பொலிசார், பொது அமைப்பினர் என பலர் கலந்து கொண்டனர்.



Comments