சுவாமி விபுலாநந்தர் ஞாபகார்த்த சவால் கிண்ண பொது அறிவு வினா விடை சமரின் இறுதிப் போட்டி நிகழ்வுகள் ........

 சுவாமி விபுலாநந்தர் ஞாபகார்த்த சவால் கிண்ண பொது அறிவு வினா விடை சமரின் இறுதிப் போட்டி நிகழ்வுகள் ........

சிவானந்தியன் பட்டமுன் மாணவர் சங்கத்தினால் 15வது முறையாக நடாத்தும் சுவாமி விபுலாநந்தர் ஞாபகார்த்த சவால் கிண்ண பொது அறிவு வினாவிடை சமரின் இறுதிப் போட்டி நிகழ்வுகள், மட்டக்களப்பு சிவானந்தா தேசிய பாடசாலை மண்டபத்தில்  இடம்பெற்றது.

சிவானந்தியன் பட்டமுன் மாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில், சிவானந்தா தேசிய பாடசாலையின் பழைய மாணவர் சங்கத்தின் தலைவர் வி.வாசுதேவன் இணை ஒருங்கிணைப்பில், சிவானந்தியன் பட்டமுன் மாணவர் சங்கத்தின் செயலாளர் எம்.டீஸன் தலைமையிலும் வினாவிடை சமர் நடாத்தப்பட்டது.

நிகழ்விற்கு பிரதம அதிதியாக கிழக்கு மாகாண கல்வி பணிப்பாளர் செல்வி அகிலா கனகசூரியம் கலந்து கொண்டார். நிகழ்வில் அதிதிகள் மலர் மாலை அணிவித்து, பேண்ட் வாத்திய இசையுடன் வவேற்கப்பட்டதை தொடர்ந்து தேசிய கொடிஇ பாடசாலை கொடி ஏற்றப்பட்டு நிகழ்வுகள் ஆரம்பமாகின.

மாவட்ட மட்டத்தில் 50 பாடசாலைகளுக்கிடையில் நடத்தப்பட்ட வினாவிடை தெரிவு போட்டியில், பதினாறு பாடசாலையில் வெற்றி பெற்று 16 பாடசாலைகளுக்கிடையில் நடத்தப்பட்ட இறுதி போட்டியில் மட்டக்களப்பு வின்சென்ட் மகளிர் பாடசாலை மற்றும் காத்தான்குடி மத்திய கல்லூரி தெரிவாகின.

இறுதிப் போட்டியில் முதலாம் இடத்தினை மட்டக்களப்பு வின்சென்ட் மகளிர் தேசிய பாடசாலையும், இரண்டாம் இடத்தை மட்டக்களப்பு காத்தான்குடி மத்திய கல்லூரி பெற்றதுடன், மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தின் கொத்தியாபுளை கலைவாணி வித்தியாலயம் மூன்றாம் இடத்தினையும் பெற்றது. வெற்றி பெற்ற மாணவர்களுக்கான சான்றிதழ்கள், பரிசில்களும் வழங்கப்பட்டன

சுவாமி விபுலாநந்தர் ஞாபகார்த்த சவால் கிண்ண பொது அறிவு வினாவிடை சமரின் இறுதிப் போட்டி நிகழ்வில் ஆன்மீக அதிதியாக இராமகிருஷ்ண மிசன் பொது முகாமையாளர் நீலமாதவானந்தா ஜீ மகராஜ், மட்டக்களப்பு வலயக் கல்வி பணிப்பாளர் சுஜாதா குலேந்திர குமார், கல்குடா வலயக் கல்விப் பணிப்பாளர் பணிப்பாளர் அனந்த ரூபன், மட்டக்களப்பு மத்திய வலயக் கல்வி பணிப்பாளர் அமீர், சிவானந்தா தேசிய பாடசாலை அதிபர் சுவர்னேஸ்வரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Comments